டிரெண்டிங்

ஜெயலலிதா வீட்டில் ரெய்டு.. முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்?: தங்க தமிழ்செல்வன்

ஜெயலலிதா வீட்டில் ரெய்டு.. முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்?: தங்க தமிழ்செல்வன்

webteam

ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டை முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்? என்று தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தி வந்த வருமான வரித்துறையினர் போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனையை நடத்தினர். 

இந்நிலையில் தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ் செல்வன் தூத்துக்குடியில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தால்தான் முதலமைச்சர் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து கண்டனம் தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்றார்.