முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூரில் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் விழா இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்றார்.