டிரெண்டிங்

அளவை பெரிதாக்க நினைத்து ஆணுறுப்பில் மெட்டல் ரிங் மாட்டியவருக்கு நேர்ந்த விபரீதம்!

JananiGovindhan

உடல் அமைப்புகளை, உடல் உறுப்புகளை செயற்கையாக மாற்ற வேண்டும் என எண்ணி ஏதேதோ சிகிச்சைகளை செய்துக்கொண்டு அதனால் அவதியுறுபவர்கள் குறித்த பதிவுகள் தொடர்ந்து காணக்கிடைக்கின்றன.

இப்படி இருக்கையில் தாய்லாந்த் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் மேற்கொண்ட விநோதமான முயற்சியால் தற்போது விபரீதத்தை சந்தித்திருக்கிறார். அது தொடர்பான செய்தி மெட்ரோ ஊடகம் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, அடையாளம் தெரியாத அந்த நபர் தனது பிறப்புறப்பின் அளவு பெரிதாக வேண்டும் என்பதற்காக அதில் உலோகத்தாலான வளையம் ஒன்றை மாட்டியிருக்கிறார். ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. நான்கு மாதங்களாக அந்த வளையத்தை மாட்டியே வைத்திருந்தால் அது அவரின் ஆணுறுப்பிலேயே சிக்கியிருக்கிறது.

இதனால் வளையத்தை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் படாதப்பாடு பட்டும் அவர்களால் முடியாமல் போனதால் வேறு வழியில்லாமல் தீயணைப்புத்துறையை வரவழைத்திருக்கிறார்கள்.

க்ருங்தாய் பொது மருத்துவமனையில்தான் அந்த நபர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்புத்துறையினர் பவர் டூல்கள் மற்றும் வெல்டிங் கட்டர்களை கொண்டு அந்த நபரின் ஆணுறுப்பில் சிக்கியிருந்த மெட்டல் ரிங்கை ஒருவழியாக வெட்டி எடுத்திருக்கிறார்கள்.

இந்த வேலையை செய்து முடிக்க தீயணைப்புத்துறையினருக்கு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உலோக வளையம் நீண்ட நேரம் சிக்கியிருந்ததால் தொற்று அல்லது துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், "நான்கு மாதங்களாக தனது பிறப்புறுப்பில் இரும்பு வளையத்தை அணிந்திருப்பதாக அந்த நபர் கூறினார். அது தனது ஆண்குறியை பெரிதாக்கும் என்று அவர் நம்பினார். ஆனால் ரத்த ஓட்டம் சரியாக நடைபெறாததால் அந்த இடத்தில் வீக்கமடைந்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளாக பிறப்புறுப்பில் வளையம் மாட்டியிருந்ததாகவும் இந்த மாதிரி இப்போதுதான் முதல் முறையாக நடந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.” இவ்வாறு வளையத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்ட சோம்சாய் சோக்காய் என்பவர் கூறியிருக்கிறார்.