ஆடி திருக்கல்யாண திருவிழாவை ஒட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் காலை, மாலை இரு வேளைகளில் பர்வதவர்த்தினி அம்பாள், தினம் ஒரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் ஆடி திருவிழா இரண்டாவது நாளான நேற்று வியாழக்கிழமை இரவு தங்க காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய பர்வதவர்த்தினி அம்பாள், கோயிலில் இருந்து புறப்பாடாகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பர்வதவர்த்தினி அம்பாள் வீதி உலா வின் போது அம்பாளுக்கு முன்னால் சென்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் யானை ராமலக்ஷ்மியம் வீதியுலா வந்தது.
அப்போது தெற்கு ரத வீதியில் உள்ள பக்தர் ஒருவர் வீட்டில் ராமலக்ஷ்மிக்கு பில்டர் காப்பி கொடுத்தனர்.
அதனை வாங்கிய யானைப்பாகன் ராமு யானைக்கு வழங்கினார். யானை பாகன் கொடுத்த காபியை ரசித்து ருசித்து ராமலட்சுமி யானை குடித்து மகிழ்ந்தது. கோவில் யானை ராமலட்சுமி காபி குடித்ததை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். யானை ராமலக்ஷ்மி காபி குடீத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.