டிரெண்டிங்

தெலங்கானாவில் 10 சதவிகித வாக்குப்பதிவு !

தெலங்கானாவில் 10 சதவிகித வாக்குப்பதிவு !

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு
தொடங்கியதில் இருந்து ஏராளமான வாக்காளர்கள், வாக்குச்சாவடி முன் வரிசையாக நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றினர். மிக
முக்கியமாக முதல்முறை வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து, தங்களது விரலை செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில்
பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி பரபரப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை தெலங்கானாவில் 10.6 சதவிகிதம், அந்தமான் தீவுகளில் 5.83
சதவிகிதம், அஸாமில் 10.2 சதவிதம், அருணாசல பிரதேசத்தில் 13.3 சதவிகிதம், லட்சத்தீவுகளில் 9.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. நாடெங்கும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7
கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலங்களிலும் 2 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது தவிர உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாகவும் ஒடிஷா சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.