டிரெண்டிங்

புதிய கட்சியை தொடங்கினார் லாலு பிரசாத் யாதவ் மகன்

webteam

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.


பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கடந்த சில நாட்களுக்கு முன் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகினார். இவர் தனது தம்பி தேஜஸ்வி யாதவ்வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அவர் தனிக் கட்சி தொடங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் தேஜ் பிரதாப் யாதவ் ‘லாலு ராப்ரீ மோர்சா’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அத்துடன் அக்கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தேஜ் பிரதாப், “என்னுடைய தம்பி தேஜஸ்வி யாதவை சுற்றி இருப்பவர்கள் அவரை எனக்கு எதிராக செயல்படவைக்கிறார்கள்”எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேஜ் பிரதாப் யாதவ் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியில் இரண்டு இடங்கள் கேட்டிருந்தார். ஆனால் அவர் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. அதனால் அவர் கட்சியிலிருந்து விலகினார்.