டிரெண்டிங்

போலீசை கொன்ற ரவுடிக்கு ஆதரவாக கண்ணீர் அஞ்சலி; நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்!

போலீசை கொன்ற ரவுடிக்கு ஆதரவாக கண்ணீர் அஞ்சலி; நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்!

JustinDurai

போலீசை கொன்ற ரவுடிக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நெல்லை ஆயுதப்படை காவலரை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

பாளையங்கோட்டை ஆயுதப் படையில் பணியாற்றும் காவலர் சுடலைமுத்து. இவர் தனது ஃபேஸ்புக் ஐடியில் தூத்துக்குடி அருகே காவலர் சுப்பிரமணியனை வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்துவுக்கு ஆதரவாக அவரின் இறுதி ஊர்வலத்தை பதிவு செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குற்றவாளியை பிடிக்க சென்ற காவலரை கொன்ற குற்றவாளிக்கு தனது சமூகத்தின் மீதுள்ள பற்றால் அவருக்கு ஆதரவாக சக காவலரே கண்ணீர் அஞ்சலி பதிவு செய்து போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனைத்தொடர்ந்து காவலர் சுப்பிரமணியனை கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக போலீஸ்காரர் சுடலைமுத்து செயல்பட்டதாக கூறி அவரை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் உத்தரவிட்டார்.