டிரெண்டிங்

டேங்கர் லாரி டெண்டர் ரத்து விவகாரம் :மத்திய அரசு முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

டேங்கர் லாரி டெண்டர் ரத்து விவகாரம் :மத்திய அரசு முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

webteam

டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது அகில இந்திய அளவில் டெண்டர் விடமுடியாது என்ற மத்திய அரசின் முடிவு, கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். 

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தபின் தம்பித்துரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  டேங்கர் லாரி ஒப்பந்தங்களில் அந்தந்த மாநில லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதியை கைவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக கூறினார்.

மேலும், மத்திய அரசின் இந்த முடிவால் நாமக்கல் டேங்கர் லாரித் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.