டிரெண்டிங்

"நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி" - தமிழிசை

"நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி" - தமிழிசை

webteam

மக்களோடு மக்கள் இணைந்தால் மக்களாட்சி எனவும் குடும்பத்தோடு குடும்பம் இணைந்தால் குடும்ப ஆட்சி எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து ராயப்பேட்டையில் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் பிரதமராக வர தகுதி படைத்தவர் ராகுல் காந்தி எனவும் நேரு குடும்பத்தோடு கோபாலபுரம் குடும்பம் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்நிலையில், மக்களோடு மக்கள் இணைந்தால் மக்களாட்சி எனவும் குடும்பத்தோடு குடும்பம் இணைந்தால் குடும்ப ஆட்சி எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி என்று மக்கள் புரிந்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.