ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், டிடிவி தினகரன், பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அர்.கே.நகர் தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து நான் சில பாஜவினர்களிடம் கேட்டு தெரிந்தது. அங்கு திமுகவுக்கும், டிடிவி தினகரனுக்கும் தான் போட்டி நிலவுவதாக தெரியவருகிறது. அப்படியானால் தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் என பதிவிட்டுள்ளார்.