டிரெண்டிங்

“இந்தியை திணிப்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்” - தமிழிசை

“இந்தியை திணிப்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்” - தமிழிசை

webteam

தான் யாரையும் மிரட்டி பழக்கப்பட்டவள் கிடையாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

குலசேகரப்பட்டினத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “20 நாட்கள் இந்த மக்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன். நான் தோற்றாலும் ஏறக்குறைய இரண்டரை லட்சம் பேர் என்னை ஆதரித்துள்ளனர். அவர்களுக்கு என்றுமே நான் நன்றியோடு இருப்பேன். வருங்காலம் எங்களுடையதுதான் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். இப்பகுதி மக்களுக்கு தேவையானவற்றை ஒன்று ஒன்றாக நிறைவேற்ற பாடுபடுவேன். 

புதிய கல்வி கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று எல்லோரிடமும் விசாரித்து ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். உடனே இந்தியை திணிப்பதைபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இல்லாத ஒரு திணிப்பை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார்கள். ஏன் திமுகவுக்கு வாக்களித்தோம். ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என வருத்தப்படுவார்கள் எனக் கூறினேன். தூத்துக்குடி மக்கள் மீது நான் அன்போடு இருக்கிறேன். ஆதங்கத்தில் வருத்தப்படுவார்கள் என நான் கூறியதை மிரட்டுகிறேன் என அவர்கள் நினைத்து கொண்டால் நான் பொறுப்பல்ல. நான் யாரையும் மிரட்டி பழக்கப்பட்டவள் கிடையாது. மக்களின் ஆதரவை திரட்டி பழக்கப்பட்டவள்.” எனத் தெரிவித்தார்.