டிரெண்டிங்

நாங்கள் பொங்கி எழுந்தால்.... தமிழிசை சவுந்தரராஜன்

நாங்கள் பொங்கி எழுந்தால்.... தமிழிசை சவுந்தரராஜன்

Rasus

நாங்கள் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “ கடந்த 7ஆம் தேதிதான் கோவை மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மறுபடியும், குறுகிய காலத்தில் நேற்று நள்ளிரவு மாவட்ட தலைவர் வீட்டில் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபாயகரமான நிகழ்வாக உள்ளது. கடும் கண்டனத்திற்குரியது. கோவை போன்ற மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது காவல்துறையினர் எந்தளவிற்கு பாதுகாப்பு அளிக்கின்றனர் என்பதை காட்டுகிறது. எச்சரிக்கையாக கையாள வேண்டியதை அஜாக்கரதையாக காவல்துறையினர் கையாண்டு உள்ளனர்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ இதுதான் பாஜகவினர் மீது நடத்தப்படுகின்ற கடைசி தாக்குதல். இதுபோன்ற விஷயங்களைக் நாம் சும்மா விடக்கூடாது. இனிமேல் பொறுத்து கொள்ள மாட்டோம். நாங்கள் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது. ரத யாத்திரை பிரச்னையில்லை. ரத யாத்திரை வரக்கூடாது என்று சொல்லிதான் பிரச்சனை செய்கிறார்கள். இந்துக்கள் அத்தனைபேரும் சிந்தனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. ஏனெனில் ராமரையும், சீதாவையும், அனுமனையும் தாங்கி கொண்டு ஒரு ரதம் கூட தமிழகத்திற்குள் வரக்கூடாது என்றால் இந்துகளின் ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு போகக்கூடாது. ஓட்டு மட்டும் உங்களுக்கு வேண்டும். ரதம் வேண்டாமா..? இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆண்டாள் வளர்த்த தமிழ்.. பெரியார் பிறந்தது பெரிதா ? இல்லை நாயன்மார்கள் , ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா என்று வருங்காலத்தில் பார்ப்போம். திராவிட நாடு என்றால் என்ன? அல்லது தமிழ்நாடு என்றால் என்ன ? என்பதில் ஸ்டாலினுக்கே சந்தேகம். 23ஆம் தேதி போராட்டத்தின்போது  நாம் கூட்டி வரும் கூட்டம் இனிமேல் அவர்களை அச்சுறுத்த வேண்டும். பயமுறுத்த வேண்டும், மற்றவர்களை பற்றி பேச பயப்படுகிறார்கள் அல்லவா..? அதுபோல் இந்து மதத்தை பற்றி பேச அவர்கள் இனி பயப்பட வேண்டும். அவர்களுக்கு நம் மீது கைவைக்க துணிச்சல் வரக்கூடாது. ஆழமாக ஆராயாமல் எதற்கெடுத்தாலும் பாஜக என்று சொல்லும்போது பதற்றமாக இருக்கிறது” என காரசாரமாக பேசினார்.