டிரெண்டிங்

திருமாவளன் பேச்சு அவருக்கே எதிராக அமையும்: தமிழிசை

திருமாவளன் பேச்சு அவருக்கே எதிராக அமையும்: தமிழிசை

webteam

இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும் என்ற திருமாவளவன் பேச்சு அவருக்கே எதிராக அமையும் என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை, சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை மூப்பனார் நகரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். 

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “திருமாவளவனின் பேச்சை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். மணிசங்கர் அய்யரின் வார்த்தகளை கேட்டாலே இப்படிப்பட்ட தலைவர்களை கொண்டுள்ள கட்சியோடு, திமுக கூட்டனி வைத்துள்ளது என்று நினைப்பார்கள். திருமாவளவன் இந்துக்கோயில்களை இடித்துத் தள்ள வேண்டும் என்று சொல்கிறார். தமிழகத்தின் பெண்கள் பெரும்பாலும் வழிபடும் காஞ்சிபுரம் காமாட்சிக் கோவில் எதற்கு என்று கேட்கிறார். எனவே இதுவெல்லாம் திமுக, காங்கிரஸ், திருமாவளவனுக்கு எதிர்மறையாகத்தான் போகும்” என்று கூறினார்.