டிரெண்டிங்

திரைத்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம்: தமிழிசை கருத்து

திரைத்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம்: தமிழிசை கருத்து

Rasus

திரைத்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இணை தயாரிப்பாளர் மற்றும் சசிகுமாரின் பட தயாரிப்பு நிறுவன அலுவலக நிர்வாகியாக பணியாற்றி வந்த அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசோக்குமார் தற்கொலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அசோக்குமார் கந்துவட்டி தொல்லையால் தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது. திரைத்துறையின் துயரங்கள் களையப்படவேண்டும். தீர்வுகள் காண முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.