டிரெண்டிங்

வங்கிக்கடன் திட்டத்தை‘பக்கோடா’விற்பதாக ஒப்பிடுவதா?: தமிழிசை காட்டம்!

webteam

ஏழ்மை என்பது புரிந்தவர்களுக்கு, ஏழைபங்காளன் மோடியின் பட்ஜெட் புரியும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு பதிலளித்து தமிழிசை, 20 ஆண்டுகளாக மத்திய அரசில் முக்கிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரத்தில் வங்கிகளையும், ஏடிஎம் செண்டர்களையும் அவர் வேறு ஒன்றும் செய்யவில்லை என்றும், வேலையில்லாதோர் வங்கிக்கடன் மூலம் தெருவில் பக்கோடா விற்றாலும் தினசரி ரூ.200 பெறமுடியும் என்பதை திரித்து பக்கோடா விற்பவர்களை சிதம்பரம் கேவலமாக கூறுவது ஏன்? என வினவியுள்ளார். அத்துடன் மன்மோகன் சிங் ஆட்சியில் செயல்படுத்த முடியாத திட்டங்களை செயல்படுத்திக் காட்டியவர் பிரதமர் மோடி என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் ஏழ்மை என்பது புரிந்தவர்களுக்கு, ஏழைபங்காளன் மோடியின் பட்ஜெட் புரியும் என கூறியுள்ளார்.