அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுக ஆட்சியில் ஏன் அமலாக்கவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் கலியாக உள்ள 62 அர்ச்சகர் பணியிடங்களுக்கு அனைத்து சாதியினரையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அர்ச்சகராக நியமித்துள்ளது. இதையடுத்து கேரள அரசை பல்வேறு தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்ளிட்டோரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பாஜவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசும்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுக ஆட்சியில் ஏன் அமலாக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சசிகலாவின் பரோல் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என அரசு கவனிக்க வேண்டுமென வலியுறுத்தினார். கீழடி அகழ்வாராய்ச்சி அரசியலாக்கப்படுவதாகவும், ஆராய்ச்சிக்கு பின்னர் மண் போட்டு மூடுவது இயல்பான நடைமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.