டிரெண்டிங்

நடந்தது உண்மையான தேர்தலே இல்லை: தமிழிசை பேட்டி

நடந்தது உண்மையான தேர்தலே இல்லை: தமிழிசை பேட்டி

webteam

ஆர்.கே.நகரில் உண்மையான தேர்தலே நடைபெறாத போது முடிவுகள் எப்படி உண்மையாக இருக்கும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “தேர்தலில் பாஜக பின் தங்கியுள்ளது என கூற வேண்டாம். தமிழகமே பின் தங்கிய நிலையில்தான் இருக்கிறது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் உள்ளது. டிடிவி தினகரன் வாக்குகள் பெற என்ன காரணம்? அவர்கள் என்ன பெரிய தியாகம் செய்துள்ளார்களா? தமிழகத்திற்காக உழைத்திருக்கிறார்களா? இதில் கருத்து சொல்வதற்கு கூட எதுவும் இல்லை. இங்கு உண்மையான தேர்தலே நடைபெறாத போது முடிவுகள் எப்படி உண்மையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.