டிரெண்டிங்

ஆளுநருக்கு அதிகாரமே இல்லையென கூற முடியாது: தமிழிசை

ஆளுநருக்கு அதிகாரமே இல்லையென கூற முடியாது: தமிழிசை

webteam

ஆய்வு மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரமே இல்லையென கூற முடியாது என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பணிகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், ஆளுநர் ஆய்வு செய்வதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்த தேவையில்லை என்று தமிழிசை  கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் அதிகாரத்துக்கு உட்பட்டுத்தான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும் என்றும், ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லையென கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.