டிரெண்டிங்

“புறநானூறு, குறள்.. ஆங்கிலத்தில் விளக்கம்” - அசத்திய தமிழச்சி தங்கபாண்டியன் 

“புறநானூறு, குறள்.. ஆங்கிலத்தில் விளக்கம்” - அசத்திய தமிழச்சி தங்கபாண்டியன் 

rajakannan

புறநானூறு, திருக்குறளை சுட்டிக்காட்டி தன்னுடைய முதல் உரையை நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார்.

கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் வரிகளையும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளை குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சினை தொடங்கினார் தமிழச்சி தங்கப்பாண்டியன். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி ஆன அவர், பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் அவரது தந்தை தங்கப் பாண்டியன் ஆகியோரையும் தன்னுடைய தொடக்க உரையில் நினைவு கூர்ந்தார்.

அவர் விரிவான அறிமுக உரை ஆற்றிய போது, அவை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். தமிழச்சி தங்கப்பாண்டியன் தன்னுடைய முதல் உரையை பேசுவதால் அவருக்கு கூடுதல் நேரம் தர அனுமதிக்கின்றேன் என சபாநாயகர் கூறினார். பின்னர் பேசிய தமிழச்சி, நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோல், தமிழ்ப்பெண் நாட்டின் நிதியமைச்சராக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பிறகு, பட்ஜெட் தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் சாடினார்.