டிரெண்டிங்

தமிழ்நாடு என் தாய்நாடு.. இந்தியா இடைக்கால ஏற்பாடு: வைகோ ஆக்ரோஷம்

தமிழ்நாடு என் தாய்நாடு.. இந்தியா இடைக்கால ஏற்பாடு: வைகோ ஆக்ரோஷம்

Rasus

தமிழ்நாடு என் தாய்நாடு.. இந்தியா இடைக்கால ஏற்பாடு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் முதலமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடச் செல்ல முயன்றனர். அப்போது பேசிய வைகோ " எல்லோரும் அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்றுவிடுவார்கள். நிலக்கரி படுகைகளில் ஷேல் கேஸ், மீத்தேன் கேஸ் எல்லாம் வந்து லட்சோப லட்சம் கோடி பணம் இந்தியாவுக்கு கிடைக்கும். சீனாவை கூட பொருளாதாரத்தில் இந்தியா ஜெயிக்கும். ஆனால் நாங்கள் அழிந்து போவோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் செழிந்து வாழ்ந்த எங்கள் அன்னை பூமி அழிந்து போகும். தமிழ்நாடு என் உயிர்.. தமிழ்நாடு என் தாய்நாடு. இந்தியா இடைக்கால ஏற்பாடு.. இதே நிலை நீடித்தால் சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாடும் போது இந்தியாவின் பல பகுதிகள் காணாமல் போகும்.

அதில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கும். இதற்காக வழக்கு போட்டால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன். எங்கள் தலையில் பாராங்கல்லை போட்டு அழிக்க துடிக்கும் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கைக்கூலியாகி விட்டார். பதவியில் நீடிக்க முதலமைச்சருக்கு தார்மீக உரிமை கிடையாது. தஞ்சை மாநாடு செப்டம்பர் 15-ல் நடைபெறும். அதில் முக்கியமான பிரகடனத்தை வெளியிடுவேன்" என்றார்.

தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட மதிமுக-வினர் முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வைகோ உள்ளிட்டோரை கைது செய்தனர்.