துணை முதல்வராக வர ஆசைப்படவில்லை என்றும் சிலர் பொய் தகவலை வெளியிடுகின்றனர் என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
வேலூர் பிரச்சாரத்தில் பேசிய தங்கமணி, “வேலூர் அதிமுக வெற்றிக் கோட்டையாக மாறும். நான் துணை முதல்வராக ஆசைப்படுவதாக பொய் செய்திகளை சிலர் வெளியிடுகின்றனர். எந்த பதவிக்கும் ஆசைப்படுவன் நான் இல்லை. ஆட்சியை காப்பாற்றுவது தான் எங்கள் பணி. திமுகவை பிளவுப்படுத்த நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்படும்” என்று கூறினார்.