டிரெண்டிங்

'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌

'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌

webteam

தமிழகத்தில் ந‌டைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி‌ சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையினை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இது தவிர தருமபுரி உள்ளிட்ட ஐந்து மக்களவைத் தொகுதிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி‌ சத்யபிரதா சாஹூ, 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், பிரச்னை என புகார் வரும் பகுதிகளில் உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாஹூ தெரிவித்தார்.மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் 656 வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவை கண்காணித்து வருவதாகவும் இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வழக்கத்தைவிட பலமடங்கு கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.