டிரெண்டிங்

“நாக்கை அறுப்பேன் என்பது வாய் தவறி வந்த வார்த்தை” - அமைச்சர் துரைக்கண்ணு

rajakannan

நாக்கை அறுப்பேன் என்ற வார்த்தை வாய் தவறி வந்துவிட்டது என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம் எனக்கூறி, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கடந்த செப்டம்பர் 25இல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டங்களின் தலைநகரிலும் நடந்த பொதுக்கூட்டங்களை அமைச்சர்கள் தலைமையேற்று பேசினார்கள். 

தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசைப் பற்றி தவறாக பேசினால் நாக்கை அறுப்பேன்” என்ற மிரட்டும் தொணியில் பேசினார். அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு அதற்கு விளக்கம் அளித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “நாக்கை அறுப்பேன் என்ற வார்த்தை வாய் தவறி வந்துவிட்டது. யாரையும் குறிப்பிட்டு அந்த வார்த்தையை கூறவில்லை. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நாக்கு அழுகிவிடும் எனக் கூற வந்தேன். ஆனால், வாய் தவறி நாக்கை அறுப்பேன் என தவறுதலாக வார்த்தை வந்துவிட்டது. ஒருவேளை கட்சித் தலைமை ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதற்கு கட்டுப்படுவேன்” என்றார்.