டிரெண்டிங்

காங். போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை? - பட்டியல் ஒப்படைப்பு

காங். போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை? - பட்டியல் ஒப்படைப்பு

Rasus

மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, கே.வி.தங்கபாலு ஆகியோர், துரைமுருகன் தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுக குழுவிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருச்சி, மயிலாடுதுறை, ஆரணி ஆகிய தொகுதிகளை ஒதுக்கக் கோரி காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.