சட்ட விதிகளை தளர்த்தி, தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதாக வெளிவந்துள்ள செய்தியின் உண்மைதன்மையை இந்த அரசு உடனடியாக விளக்கிட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி வாங்க உத்தரவு போட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. டெண்டர் இல்லாமல் எந்த கொள்முதலும் செய்யக்கூடாது என்ற சட்டத்தை இந்த கொள்முதலுக்காக தளர்த்திஅதானி குழுமத்திடம் இருந்து ஒரு டன் நிலக்கரி 5 ஆயிரத்து 8 ரூபாய்க்கும், ஸ்ரீ ராயல்சீமா நிறுவனத்திடம் இருந்து 4 ஆயிரத்து 936 ரூபாய்க்கும், யாசின் நிறுவனத்திடம் இருந்து 5 ஆயிரத்து 98 ரூபாய்க்கும் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Read Also -> மணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்
நிலக்கரி கையிருப்பு இருப்பதாக தெரிவித்த அமைச்சர் தங்கமணி, பின்னர் மத்திய அரசிடம் நேரிலேயே சென்று நிலக்கரி தேவை உள்ளதாக தெரிவித்தார். இந்த முரண்பட்ட நடவடிக்கையால் சந்தேகம் எழுகிறது. இந்த நடைமுறை தொடர்ந்தால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த செய்தி உண்மை எனில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செய்தியின் உண்மைதன்மையை இந்த அரசு உடனடியாக விளக்கிட வேண்டும்'' என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.