தாடைக்கு கீழே அணிந்திருந்த பெண் ஒருவரின், முகக் கவசத்தை அன்னப்பறவை ஒன்று சரியாக அணிவித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாத் தொற்று பரவலைத் தடுக்க, முகக் கவசம் அணிதல், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை தூய்மைப்படுத்துதல், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை மக்கள் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகின்றனர். பொது இடங்களில் இவ்வகையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் முகக் கவசத்தை தாடைக்கு கீழே அணிந்திருந்த பெண் ஒருவர், பூங்காவில் நின்று கொண்டிருந்த அன்னப்பறவைக்கு ரசிக்கும் வண்ணம், அதனருகில் அமர்ந்திருந்தார். தன்னை தாக்க வருகிறார் என நினைத்த அன்னப்பறவை அவரது முக கவசத்தை ஆக்ரோஷமாக பிடித்து இழுத்தது. இதில் தாடைக்கு கிழே இருந்த முகக் கவசமானது, மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை மூடும் வண்ணம் சரியாக பொருந்தியது.
இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் வாசி ஒருவர் அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.