டிரெண்டிங்

FACT CHECK: சன்கிளாஸ், தாடி: Swag ஸ்டைலில் சிக்னலில் பிச்சை எடுக்கும் நபர்!

FACT CHECK: சன்கிளாஸ், தாடி: Swag ஸ்டைலில் சிக்னலில் பிச்சை எடுக்கும் நபர்!

JananiGovindhan

சாமானியர்கள் திறமை எளிதில் மக்களின் வரவேற்பை மிகப்பெரிய காரணியாக இருக்கிறது சமூக வலைதளங்கள். எழுத்தாக, வீடியோவாக, ஃபோட்டோவாக என பல பரிமானங்களில் திறமைசாலிகள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு அதன் மூலம் பிரபலங்களாவது தற்போது பெரும் ட்ரெண்டாகவே மாறியிருக்கிறது.

அந்த வகையிலான சம்பவம் ஒன்று தலைநகர் டெல்லியில் நடந்திருப்பதுதான் தற்போது ட்விட்டர் வாசிகளிடையே வைரலாகிக் கொண்டிருக்கும் ஃபோட்டோ மற்றும் வீடியோ சாட்சியாக உள்ளது.

அதன்படி, டெல்லியின் டிராஃபிக் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சைக் கேட்கும் வீடியோவும் ஃபோட்டோவும்தான் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பிச்சைக் கேட்பதில் என்ன வைரல் என கேள்வி எழலாம். பிச்சைக்காரர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா என்று கூட நினைக்க வைக்கும்.

ஆனால் அந்த நபரின் தோற்றமோ ஏதோ சினிமா நடிகர் போலவும், மாடலிங் செய்பவர் போலவுமே இருக்கிறது. கையில் தடி வைத்து நடக்கும் அவர் ட்ரிம் செய்த தாடியுடன் சன் கிளாஸ் அணிந்தபடி கத்தரித்த முடியை லேசாக கலைத்தபடி அப்படியே காண்பதற்கு ஹீரோ போன்று இருக்கிறார்.

NDTVயின் பணியாளராக இருக்கக் கூடிய க்வால்ஜித் சிங் பேடி என்பவர் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி “டெல்லியின் பிச்சைக்காரர்” எனக் கேப்ஷனிட்டு ட்விட்டரில் அந்த நபரின் ஃபோட்டோவையும் பகிர்ந்திருந்தார். இதனைக் கண்ட ஆயிரக்கணக்கான இணையவாசிகள் அந்த பதிவை ரீட்டீவிட் செய்து வைரலாக்கியிருக்கிறார்கள்.

மேலும், அவர் பிச்சைக்காரராக இல்லாமல் க்ரிப்ட்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்த அதனை இழந்திருப்பார் என கமெண்ட் செய்திருக்கிறார். இன்னும் சிலர் அந்த நபர் பார்ப்பதற்கு பாலிவுட் நடிகர்கள் ஆதித்யா ராய் கபூர், ஹ்ருத்திக் ரோஷன் போன்றும், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் போன்று இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர் உண்மையில் பிச்சை எடுப்பவராக இருக்க மாட்டார் எனவும் சிலர் பதிவிட்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், ஃபோட்டோ பதிவிட்ட க்வால்ஜித் சிங் பேடி, சிக்னலில் பிச்சை எடுக்கும் அந்த நபரின் வீடியோவையும் பதிவிட்டு தெளிவுபடுத்தியுள்ளார்.