டிரெண்டிங்

ஆதரவு எம்.எல்.ஏ. எண்ணிக்கை 40ஆக உயரும்: டிடிவி தினகரன்

ஆதரவு எம்.எல்.ஏ. எண்ணிக்கை 40ஆக உயரும்: டிடிவி தினகரன்

webteam

முதல்வருக்கு எதிரான தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடந்த நடிகர் விஷாலின் தங்கை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததால், சென்னை அண்ணாநகரில் உள்ள விஷாலின் இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார் டிடிவி தினகரன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்து சுதந்திரத்தை முடக்க தமிழக அரசு முயற்சிப்பதாகவும், தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறினார்.

முதல்வரை நீக்கக் கோரும் தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை விரைவில் 40ஆக உயரும் எனவும், கட்சிப் பணிகளை செய்யாதவர்களை நீக்கி வருவதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்மை செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், விஷால் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி எனவும் தினகரன் கூறினார்.