டிரெண்டிங்

கொடைக்கானலில் அழியும் நிலையில் ஆதிமனிதன் கற்திட்டைகள்...!

கொடைக்கானலில் அழியும் நிலையில் ஆதிமனிதன் கற்திட்டைகள்...!

kaleelrahman

கொடைக்கானல் அருகே வெள்ளைபாறை கிராமத்தில் அமைந்துள்ள, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிமனிதன் கற்திட்டை தடம் தெரியாமல் அழியும் நிலையில் உள்ளது. 


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி சாலையில் உள்ளது வெள்ளைபாறை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிமனிதன் கற்திட்டைகள் உள்ளன. இந்த பகுதிகள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் அந்த கற்திட்டை கொஞ்சம் கொஞ்சமாக தடமே தெரியாமல் அழியும் நிலையில் உள்ளதாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கற்திட்டைகளை பாதுகாத்து அடுத்த சந்ததியினர் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள உதவி செய்ய அவர்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.