இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் கொல்லத்தில் நடந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பொது செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இப்பதவியை சுதாகர் ரெட்டி 3வது முறையாக வகிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த மகேந்திரன், முத்தரசன், சுப்பராயன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து நாள் மாநாடு ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கியது. மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.