டிரெண்டிங்

ஊழல் வழக்குகளில் தாமதம்: பிரதமருக்கு சு.சாமி கடிதம்!

ஊழல் வழக்குகளில் தாமதம்: பிரதமருக்கு சு.சாமி கடிதம்!

webteam

பல்வேறு ஊழல் வழக்குகளில் அசாதாரண தாமதம் ஏற்படுவதற்கு சிபிஐயே பொறுப்பு என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா எம்.பி. சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதிகார வர்க்கத்தினரின் ஊழலுக்கு எதிரான மோடியின் உறுதியான நடவடிக்கைக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சுவாமி, ஆனால், குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருந்தும்கூட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிபிஐ தேவையற்ற தாமதம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். ஏர்செல் மேக்சிஸ், சாரதா சிட் ஃபண்ட், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் ராபர்ட் வதேராவின் நில ஒப்பந்தங்கள் ஆகியவை இவற்றுக்கு உதாரணங்கள் என்று கடிதத்தில் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.