தமிழகத்தில் 2 வாரங்களுக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலின் தற்போதை நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் சட்டப்படி செல்லாது என்று கூறியுள்ளார். அவர்கள் 18 பேரும் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும், சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டப்படி செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் 2 வாரங்களுக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரகத்தில் உரிய தீர்வு கிடைக்கும் வரையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கூடாது எனவும் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.