ராசிபுரம் அருகேயுள்ள சம்பாபாலி புதூரில் நீட்தேர்வு எழுதிய கதிர் என்ற மாணவன் எப்போதும் செல்போனையே பயன்படுத்துவதாக பெற்றோர் திட்டியதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சம்பாபாலி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். பழங்குடி இன வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிரசாந்த், கதிர், இளவரசன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர்களில் இளையமகன் கதிர் நன்றாக படிக்கக் கூடியவர் இவர் 10ஆம் வகுப்பில் 465 மதிப்பெண்களும் 12ஆம் வகுப்பில் 362 மதிப்பெண்கள் வாங்கியதையடுத்து மருத்துவ படிப்பில் சேர நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக கேரளா சென்று படித்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கொரனோ தொற்று காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே வீட்டிலிருந்து படித்துவந்தார். நீட் தேர்வும் நன்றாக எழுதியதாக தெரிகிறது. இந்நிலையில், எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்ததால் பொற்றோர் திட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த கதிர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..