தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவு சார்பில் வருகின்ற செப்டம்பர் 5-ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு மாணவர் அமைப்புகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன.
மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை நந்தனத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லையில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல மதுரை, கோவை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களும், அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மாணவி அனிதாவின் மரணத்தை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் போராட்டங்களும் நடைபெற்றன.