டிரெண்டிங்

மாணவி அனிதா தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

rajakannan

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி மனவேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

இந்நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இந்த செய்தி மனவேதனையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை தவிர்க்க வேண்டும். நீட் தேர்வு முறை என்பது இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்ட சட்டம். மற்ற எல்லா மாநிலங்களும் கைவிட்ட போதும், தமிழக அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. சட்டப் போராட்டத்தை நடத்தியது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது. தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுக்கும் என்றார்.