டிரெண்டிங்

திருக்குறளை வைத்திருந்தால் பாராட்டியிருக்கலாம் : ஸ்டாலின்

திருக்குறளை வைத்திருந்தால் பாராட்டியிருக்கலாம் : ஸ்டாலின்

webteam

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மணிமண்டபத்தில் திருக்குறளை வைத்திருந்தால் பாராட்டியிருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

கதிராமங்கலம் ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் இன்று கலந்து கொண்டு பேசும்போது, இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம், இந்தியாவின் பாதுகாப்பிற்கே ஒரு மாபெரும் தலைவராக இருந்தவர். இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கே தனது இன்னுயிரை தந்திருக்கக்கூடியவர். அவரை ஒரு தனிப்பட்ட மதத்தில் இணைக்கும் துர்பாக்கியமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நியாயமாக அப்துல்கலாம் நினைவிடத்தில் திருக்குறளை வைத்திருந்தால், நாம் பாராட்டி இருக்கலாம், வாழ்த்தியிருக்கலாம். நாங்கள் பகவத் கீதை மீது வெறுப்பு கொண்டு பேசுவதாக கருதக்கூடாது. அப்துல்கலாமை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் போன்று சித்தரிக்கும் செயலை மத்திய அரசு செய்திருக்கிறது என்று கூறினார்