டிரெண்டிங்

பாஜகவில் இணையும் கு.க.செல்வம் - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

பாஜகவில் இணையும் கு.க.செல்வம் - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

webteam

திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக வெளியான செய்தியையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராகவும், திமுக தலைமை நிலைய செயலராகவும் கு.க.செல்வம் இருந்து வருகிறார். சென்னை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பொறுப்பு இளைஞர் அணியைச் சேர்ந்த சிற்றரசு என்பவருக்கு வழங்கப்பட்டது. அதனால், கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகனுடன், கு.க.செல்வம் டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், கு.க.செல்வம் பாஜகவில் இணையவுள்ளார். இந்த தகவலை, அண்மையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.