டிரெண்டிங்

ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை - 24ஆம் தேதி கூடுகிறது அமைச்சரவை

ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை - 24ஆம் தேதி கூடுகிறது அமைச்சரவை

webteam

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்க தமிழக அமைச்சரவை 24ஆம் தேதி கூடுகிறது.

தமிழக அமைச்சரவை வரும் 24ஆம் தேதி பகல் 12 மணியளவில் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல பிரச்னைகளுக்காக தமிழக அமைச்சரவை கூடியுள்ள நிலையில், தற்போது ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் பிரச்னை தொடர்பாக அமைச்சரவை கூட்டப்படுவதாக கூறப்படுகிறது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியானது எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரதான கோரிக்கையாக அமைந்தது, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்பது தான். 

எனவே அது தொடர்பாகவும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. அதுமட்டுமின்றி மேகதாது அணை குறித்தும் ஆலோசித்து, அடுத்த நடவடிக்கை எடுக்கப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.