சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தீரன் சின்னமலையின் 212-வது நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியிலுள்ள அவரது சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘மாநில வரி மாநிலங்களுக்கே’ என்ற கொள்கையை தீரன் சின்னமலை வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்கள், தீரன் சின்னமலையின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.