டிரெண்டிங்

நதிநீர் இணைப்பு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நதிநீர் இணைப்பு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Rasus

நதிநீர் இணைப்புத் திட்டங்களில் பிரதமர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் இணைப்பு பிரச்னைகளால் தமிழக விவசாயிகள் மிகுந்த துயரத்தை சந்தித்து வருவதாக கூறியுள்ளார். தமிழகத்திற்கான நீர் ஆதாரங்களை முடக்குவதும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தங்களை மீறி தடுப்பணைகளை கட்டுவதும் அண்டை மாநிலங்களின் எதேச்சிகரமான போக்காக மாறி வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை இணைப்பதோடு, மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களையும் நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நதிநீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பயனடைவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு இடையாயான நதிநீர் பிரச்னை தீர்வதோடு, தேசிய ஒருமைப்பாட்டினை வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் மேம்படவும் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.