டிரெண்டிங்

ஆளுநரை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்

ஆளுநரை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்

webteam

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்திக்கின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் கடிதம் கொடு்த்திருந்தனர். அதன்பிறகு திமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த திமுக எம்எல்ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர். ஆனால், அவ்வாறு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மீண்டும் ஆளுநரைச் சந்திக்கின்றனர்.