டிரெண்டிங்

“ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை கூடாது” - ஸ்டாலின் வலியுறுத்தல்

“ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை கூடாது” - ஸ்டாலின் வலியுறுத்தல்

webteam

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய பாரதிய ஜனதா அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, மாநிலங்களில் பணியாற்றும் மாஜிஸ்திரேட்டுகளை மத்திய அரசே தேர்வு என்று எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய்யை வார்ப்பதைப்போல் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரை மத்திய அரசு பிடுங்கி எறிவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். 

பொது விநியோக திட்டம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை என்றும் அதில் கை வைப்பது தேன் கூட்டில் கல் வீசுவதற்கு சமம் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மேலும் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கெடு விதிப்பது எதேச்சதிகாரமான, தன்முனைப்பான நிர்வாகத்தின் உச்சகட்டம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.  

இதேபோல், மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகளை மத்திய அரசே தேர்வு செய்யும் எனக் கூறியிருப்பது கூட்டுறவுக் கூட்டாட்சி முழக்கத்தை கேலிக்குரியதாக்கும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதுபோன்ற அறிவிப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், அதிமுக அரசு இந்தத் திட்டங்களை ஆரம்பதிலேயே எதிர்க்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.