அதிமுக ஆட்சியிலுள்ள குறைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதித்தாலும், உரிய தீர்வு கிடைக்க நீதிமன்றம் செல்லக்கூடிய சூழலே உள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக எங்காவது செய்யும் சிறிய தவறுகள் கூட மிகப் பெரிய அளவில் சித்தரிக்கப்படும் சூழலில், ஆளுங்கட்சி செய்யும் மிகப் பெரிய தவறுகள் கூட ஊடகங்களில் சிறிய அளவில் வெளியிடப்படுவதாக தெரிவித்தார். அத்துடன் அதிமுக ஆட்சியிலுள்ள குறைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதித்தாலும், உரிய தீர்வு கிடைக்க நீதிமன்றம் செல்லக்கூடிய சூழலே உள்ளதாக அவர் குறை கூறினார். திமுகவின் குட்கா விவகார வழக்கு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தொடர்பாக பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.