டிரெண்டிங்

மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி உயர்வு

மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி உயர்வு

sharpana

திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பு மனுவில் இருக்கும் சொத்து மதிப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தத் தகவல்களில், 

மு.க ஸ்டாலினின் சொத்து மதிப்பு 4.94 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 1.17 கோடியாகவும் உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டை விட மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூபாய் 3 கோடி அதிகரித்துள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளன. அதேபோல, உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பை விட ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறைவாக உள்ளது. மேலும், ஸ்டாலின் மீது 45 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்பு மனுவில் தகவல்கள் தெரிய வந்துள்ளன.