டிரெண்டிங்

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

webteam

நாளை மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழகம் முழுவதும் நாளை 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்திலிருந்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி நடைப்பெற்று வருகிறது. 

இந்நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். குடும்பத்தினருடன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தில் இருந்த பொதுமக்களுடன் ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.