திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எழுச்சிப் பயணம் என்ற பெயரிலான இந்த பயணத்தின்போது கட்சித் தொண்டர்களை சந்தித்து ஸ்டாலின் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பயணத்தைத் தொடங்கி 180 நாட்கள் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவார் என்றும், இதுதொடர்பான அறிவிப்பு இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு வெளியாகுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் நமக்கு நாமே என்ற பெயரில் ஸ்டாலின் தமிழகம் முழுவதம் பயணம் மேற்கொண்டிருந்தார்.