டிரெண்டிங்

பேரவைக்குள் ஸ்டாலின் குட்கா கொண்டு சென்ற வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பேரவைக்குள் ஸ்டாலின் குட்கா கொண்டு சென்ற வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

webteam

சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்ப்பளிக்கிறது.

சட்டப்பேரவை நிகழ்வு ஒன்றில் ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள், குட்கா பாக்கெட்டுகளை பேரவைக்குள் எடுத்துச் சென்றனர். அரசு தடை செய்த குட்கா பொருட்கள் காவல்துறையின் உதவியோடு கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை அரசின் கவனத்திற்கு கொண்டுவரவே குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட‌ உரிமைக்குழு, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.


அதனை எதிர்த்து கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, உரிமைக்குழுவின் நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என, இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இவ்வழக்கு, தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.