டிரெண்டிங்

அரசு ஊழியர்களை மிரட்டுவதா?: ஸ்டாலின் சாடல்

அரசு ஊழியர்களை மிரட்டுவதா?: ஸ்டாலின் சாடல்

webteam

வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களை அழைத்துப் பேச ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் தங்களது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திவரும் தொடர் போராட்டத்தை காவல்துறை மூலம் அடக்கி விடலாம் என நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடுமென்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிரட்டியிருப்பது வேதனைக்குரியது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காலவரையற்ற போராட்டத்தை நடத்தும் நிலைக்கு அரசு ஊழியர்களை தள்ளாமல், ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கங்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.