முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு, கனவாகவே இருக்கும் என்று மக்கள் தொடர்புத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியின் தருவை மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதை அமைச்சர் கடம்பூ ராஜு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் நினைக்கிறார். ஆனால் அவரின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறியுள்ளார். மேலும், தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு, கனவாகவே இருக்குமே தவிர நிஜத்தில் அவரால் முதல்வர் ஆக முடியாது என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.