டிரெண்டிங்

“ஐடி அதிகாரிகள் டிவி பார்த்தார்கள்; பிரியாணி சாப்பிட்டார்கள்; சென்றார்கள்” - மு.க.ஸ்டாலின்

“ஐடி அதிகாரிகள் டிவி பார்த்தார்கள்; பிரியாணி சாப்பிட்டார்கள்; சென்றார்கள்” - மு.க.ஸ்டாலின்

webteam

வருமான வரித்துறை சோதனைக்கு வந்துவிட்டு டிவி பார்த்துவிட்டு பிரியாணி சாப்பிட்டார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயநிதிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “எனது மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அதிகாரிகள் காலை முதல் இரவு வரை டிவி பார்த்தார்கள். டீ குடித்தார்கள். பிரியாணி வாங்கிட்டு வந்து சாப்பிட்டார்கள். பின்பு வெறும் கையோடு திரும்பி சென்றனர்.

அப்போது உங்களுக்கு இன்னும் அதிகமாக 25 சீட் கிடைக்கப்போகிறது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். திமுகவை அச்சுறுத்தவே ஐடி ரெய்டு செய்தார்கள். திமுகவை அச்சுறுத்த முடியாது. அதிமுக ஆட்சிக்கு மக்கள் தக்க பதிலடி தருகிறார்கள். பாஜக மோடியின் மஸ்தான் வேலை திமுகவிடம் செல்லாது.திமுக வெற்றியை தடுக்கவே அனைத்து பத்திரிகைகளிலும் அதிமுக விளம்பரம் செய்துள்ளது. மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. மக்கள் நம்ப மாட்டார்கள்” என்றார்.